தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 29-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 29-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில்  அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியதாவது வடகிழக்கு பருவமழை இயல்பை விட வெகு குறைவாக பதிவாகி உள்ளது.  22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகி உள்ளது.  கடந்த வாரத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருந்த நிலையில், இது கடந்த வாரம் 4 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து வரும் 2 வாரங்களில்  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: