தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கியுள்ளது: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

சென்னை: பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் காலாவதியாகி விட்டது. இதை நிரப்பக ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  ஒன்றிய அதிகாரம் அளித்தல் துறை சார்பு செயலாளர் என்.எஸ்.வெங்கடேஸ்வரன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பதவி காலம் முடிந்த பிறகு அடுத்ததாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெwடுப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக சுயநலமற்று பணியாற்றியவர்களை கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்ட கருத்தில் கொண்டு தான் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரை நியமிக்க முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க முடியும் என்று வரையறுக்க முடியாது. ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. பணிகள் விரைவில் நிறைவடையும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு, 24 மணி நேரத்தில்  இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த ஒன்றிய அரசால், 10 மாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமன செய்ய முடியவில்லை? என்று கேட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: