சூடுபிடிக்கும் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை: உச்சநீதிமன்றத்தில் விரைவில் வழக்கு விசாரணை..!

பெங்களூரு: கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை சூடுபிடித்துள்ள நிலையில் கர்நாடக பேருந்துகளில் மராத்தியில் எழுதும் போராட்டம் புனேவில் நடந்தது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு தரப்பிலும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-ம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஒரு கிராமத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் போராட்டம் நடந்து வருகிறது. புனேவில் மராட்டிய மகாசன் சார்பில் சார்பில் நடந்த போராட்டத்தின் போது கர்நாடகா மாநில பேருந்துகளில் கருப்பு பெயிண்ட்டால் மராத்தியில் எழுதும் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் எல்லை தொடர்பான விவகாரம் இரு மாநிலத்திற்கும் இடையே பூதாகரமாக வெடித்துள்ளது.

Related Stories: