உலக அளவில் முதலிடம்: வினாடிக்கு ரூ.1.48 லட்சம் லாபம் ஈட்டும் 'ஆப்பிள்'நிறுவனம்..!

வாஷிங்டன்: வினாடிக்கு 1.5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதன் மூலம் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல்படும் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்கள் வினாடிக்கு பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வருவது அனைவரையும் வியக்க வைக்கிறது. அதற்கு மூலகாரணமாக இருக்கும் அமெரிக்க ஊழியர்களின் வாழ்நாள் வருமானத்தை இந்த முன்னணி நிறுவனங்கள் ஒரே மணி நேரத்தில் ஈட்டி விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் வினாடிக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையும், ஒரு நாளில் மட்டும் 1,282 கோடி ரூபாயையும் லாபமாக ஈட்டுகிறது.

இதற்கு அடுத்தப்படியாக வினாடிக்கு 1.14 லட்சம் லாபத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. Berkshire Hathaway, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் ஏறுமுகத்தை கண்டு வந்தாலும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ஊபர் நிறுவனம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் வினாடிக்கு 215 டாலர் அதாவது 17,556 ரூபாய் இழப்பீட்டை சந்தித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: