கோயம்பேட்டில் மளிகை பொருட்களின் விலை திடீர் உயர்வு: ஏலக்காய் ரூ.1200,; மிளகு ரூ.550; லவங்கம் ரூ.750

சென்னை: சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்கள், ஊட்டி, தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகளின் மூலமாக, மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற மளிகை பொருட்கள் தினமும் வருகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வால், மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.350க்கும், தனியா ரூ.250க்கும், மிளகு ரூ.550க்கும், ஏலக்காய் ரூ.1200க்கும், லவங்கம் ரூ.750க்கும், அண்ணாச்சி பூ ரூ.900க்கும், முந்திரி ரூ.650க்கும் பட்டை ரூ.300க்கும், துவரம் பருப்பு ரூ.125க்கும், சிறுபருப்பு ரூ.100க்கும், கடலை பருப்பு ரூ.70க்கும், உளுத்தம் பருப்பு ரூ.120க்கும், கடுகு ரூ.80க்கும், சீரகம் ரூ.280க்கும், சோம்பு ரூ.150க்கும் வெந்தயம் ரூ.100க்கும் திராட்சை ரூ.250க்கும் நெய் ரூ.230க்கும் டால்டா ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் உணவுதானிய வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயம்பேடு உணவுதானிய மார்க்கெட்டில் கடந்த இரண்டு மாதமாக மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்தால், மறுபடியும் மளிகை பொருட்கள் விலை குறையும்.’’ என கூறினார்.

Related Stories: