பல்ஜி பாளையம் பகுதியில் ரூ.9.33 கோடி மதிப்பில் நவீன இயற்கை எரிவாயு மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: மணலி பல்ஜி பாளையம் பகுதியில் ரூ.9.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன இயக்கை எரிவாயு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது வார்டுக்குட்பட்ட பல்ஜி பாளையம் பகுதியில் தமிழக அரசு ‘மகாசக்தி பயோ கேஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.9.33 கோடி செலவில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு மையம் அமைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 8 மண்டலங்கள் வரை உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படும். இவ்வாறு, தயாரிக்கப்பட்ட எரிவாயுவை தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை எரிவாயு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.  இதனைதொடர்ந்து, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோருக்கு நிறுவன தலைவர் ராஜ்குமார், இணை நிர்வாக இயக்குனர் தனசேகர் ஆகியோர் பயோ கேஸ் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: