மணலி மண்டலத்தில் ரூ.2.31 கோடியில் பூங்காக்கள்

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் ரூ.2.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மணலி மண்டலம் 15வது வார்டுக்குட்பட்ட துளசி நகரில் ரூ.66 லட்சம் செலவில், 17வது வார்டு வி.எஸ்.மணி நகரில் ரூ.1.27 கோடி செலவில், 19வது வார்டு கோகுலம் நகரில் ரூ.38 லட்சம் செலவில் என 3 இடங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இதற்கான பணிகள் நடைபெற்றது.

தற்போது, இப்பணிகள் முடிவடைந்ததையொட்டி, இந்த 3 பூங்காக்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர்கள் காசிநாதன், நந்தினி, ராஜேந்திரன், தீர்த்தி, உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த, பூங்காக்களுக்கு சென்று பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

Related Stories: