ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் முதன்மைச் செயலாளர் ஆய்வு

சென்னை: அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. கேஆர். பெரியகருப்பன் அவர்களும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கூட்ட அரங்கில்  இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிடும்போது,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு ஊதிய செலவினமாக ரூ.4783.48 கோடியும், பொருட்கூறு மற்றும் நிர்வாக செலவினமாக ரூ.2360.44 கோடியுமாக மொத்தம் ரூ.7143.92 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், நடப்பாண்டில் 2.77 இலட்சம் பணிகள் எடுக்கப்பட்டு அதில் 1.08 இலட்சம் பணிகளும் 2.72 இலட்சம் நிலுவை பணிகளுமாக சேர்த்து மொத்தம் 3.80 இலட்சம் பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன என்றும்,  நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தும் இந்நிதியாண்டிற்குள் செய்து முடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து குக்கிராமங்களும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தற்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் படிப்படியாக நிறைவேற்றப்படும். 2021-2022 ஆம்ஆண்டு, 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதற்கட்டமாக 2657 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1455 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2022-2023 ஆம்ஆண்டு, 388 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2544 ஊராட்சிகளில்ரூ.1155 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டார். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) கீழ் 2022-23-ஆம் ஆண்டிற்கு 2,00,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை  1,14,073 வீடுகள்கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் 31.03.2023-க்குள் கட்டி முடிக்கப்படும்.  

என்றும், 2022-ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த தொகையாகிய ரூ.2597.47 கோடியில் இதுவரை திட்ட பயன்பாட்டிற்காக ரூ.2031  கோடி செலவிடப்பட்டுள்ளது என்பதையும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்கள்  குறிப்பிட்டார். மேலும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ், இதுவரை,  ரூ. 412.26 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட செலவீனம் இந்தாண்டின் தொடக்க இருப்பு தொகையினையும் சேர்த்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 2022-23 ஆண்டு, ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிக்கு 1000 கி.மீ நீளமுள்ள சாலைப்  பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 543 கி.மீ நீளமுள்ள சாலைப்  பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 457 கி.மீ நீளமுள்ள சாலைப்  பணிகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டுள்ளன என்றும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெறாத நபர்கள் பயன் பெறும் வகையில், 2021-22 ஆம் ஆண்டில் கூடுதலாக 44,858 புதிய தனி நபர் இல்லக் கழிப்பறைகள், ரூ.53.83 கோடி செலவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் 1,55,830 புதிய தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளது.அதேபோல், 4,429 சமூக சுகாதார வளாகங்கள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) பகுதி இரண்டு, 15வது நிதிக்குழு மானியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துடன் ஒருங்கிணைத்து 232.52 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட இடம் இல்லாத பழங்குடி/பட்டியலினத்தவர் (SC/ST) குடும்பங்களுக்கும் புலம்பெயர்ந்த / வந்து செல்லும் மக்களுக்கும்கட்டப்படவுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில், பொது இடங்கள் மற்றும் நூலகங்கள், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் போன்றவற்றின் அருகாமையில் 1,500 சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகங்கள் கட்ட பணிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளிலுள்ள 1,24,98,676 வீடுகளில்  நாளது வரை 71,05,769 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 53,92,907 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் மார்ச் 2024 ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட உள்ளன.

2022-23 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளவாறு, ஜல் ஜீவன் இயக்கம் 2022-23-ன் கீழ் 4,59,435  குடிநீர் குழாய் இணைப்புகளும், 15 வது நிதிக் குழு மானிய நிதியின் கீழ்  1,02,177 குடிநீர் குழாய் இணைப்புகளும், பல் கிராம திட்டங்களின் கிராம உட்கட்டமைப்புக்கான கூறுகளின் கீழ் 6,88,388 குடிநீர் குழாய் இணைப்புகளும் ஆக மொத்தம் 12,50,000 இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை 18,06,735 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில்  2021-22ஆம் ஆண்டில் 9,480 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 4,549 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4,931 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2019-20 மற்றும் 2021-22ஆம் நிதி ஆண்டில் 4,664 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு,  இதுவரை 3,601 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,063 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன என்றும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021-22 ஆம் ஆண்டில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (SIDS) கீழ் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (AGAMT) செயல்படும் கிராமப்புரங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தற்போதுள்ள பள்ளிக் கட்டிடங்கள்/வகுப்பு அறைகள், பள்ளிக் கழிவறைகள் (இருபாலர்), சமையலறைக் கூடங்கள் மற்றும் தண்ணீர் வசதிகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.115.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை8,922 பணிகள் ரூ.107.21 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்புகள், சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகள்  மற்றும் திட்டங்களை செயல்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும்.  

மேலும் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாவது,  “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் எனவும், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும் எனவும், தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிகளை வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்“ என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வினைத் தொடர்ந்து, 2022 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெளியிட்டார்.

Related Stories: