அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை தரப்படும்: தமிழக அரசின் அறிவிப்புக்கு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு

சென்னை: அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள் தரப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் இருந்து அனுப்பப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கவும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 2வது கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories: