தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நேற்று மாலை நடந்தது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இதில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி என்.சிவா எம்.பி, திமுக செய்தி தொடர்பு துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.