உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு பழங்கால கோயில்கள் புகைப்பட கண்காட்சி: முன்னாள் நீதிபதி பங்கேற்பு

சென்னை: உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, பழங்கால  கோயில்கள், கல்வெட்டுகள், கீழடிதொல்பொருட்களின் புகைப்பட கண்காட்சியை  முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் துவக்கிவைத்தார். ஆண்டுதோறும்,  உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை பாரம்பரிய  வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், நவம்பர் 19ம் தேதி ஒருநாள்  மட்டும் கட்டணமின்றி புராதன சின்னங்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களை  அனுமதிப்பது, பாரம்பரியத்தை பறைசாற்றும் புத்தகங்கள், தபால்தலை,  முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது, பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில்  பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் தொல்லியல்துறை சார்பில்  கடற்கரை கோயில் வளாகம் முன்பு உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பழங்கால  கோயில்கள், கல்வெட்டுகள், கீழடிதொல்பொருட்கள் கண்காட்சி திறக்கும்  நிகழ்ச்சி  நடந்தது.  வரும் 25ம் தேதி வரை கண்காட்சியை இலவசமாக  கண்டுகளிக்கலாம் எனதொல்லியல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: