ஆதிதிராவிடர் மாணவ - மாணவிகளுக்கு ரூ.28 கோடி செலவில் புதிய விடுதிகள்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மாணவ - மாணவிகளுக்கு ரூ.28 கோடி செலவில் புதிய விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் வெளியிட்டுள்ள அரசாணை: 2022-2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “ஆதிதிராவிடர் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கி கல்வி பயிலும் வகையில்,கடலூர் மாணவியர் விடுதி, கோயம்புத்தூர் (வடக்கு) மாணவர் விடுதி, பழனி மாணவர் விடுதி மற்றும் திருப்பூர் மாணவர் விடுதி ஆகிய 5 கல்லூரி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் புதிய விடுதி கட்டிடங்கள் கட்டப்படும்” என்றார். அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு 5 கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளுக்கு தாட்கோவின் மூலம் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு, ரூ.27,76,69,000க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: