இந்தோனேஷியால் நடக்கும் ஜி-20 மாநாட்டில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி நகரில் வரும் 15, 6ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடக்கிறது. இந்த அமைப்புக்கு தலைமை வகித்து, இந்த நாடு நடத்தும் கடைசி மாநாடு இதுதான். டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு, இந்த அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்கிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜி20 மாநாட்டின் தலைமை பதவியை வரும் டிசம்பர் 1ம் தேதி இந்தோனேஷியாவிடம் இருந்து இந்தியா பெறும். அந்த நாட்டில் நடக்கும் இந்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி செல்கிறார். வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை அங்கு அவர் சுற்றுப்பயணம் செய்வார்,’ என்று தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில், ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்ய அரசு நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவ் கலந்து கொள்கிறார்.

Related Stories: