சென்னை மாநகராட்சி சார்பில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகள் வழங்கினார் துணை மேயர் மு.மகேஷ்குமார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  துணை மேயர் மு.மகேஷ்குமார்  இன்று கொசுவலைகளை வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும்  நோய்களைத் தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, பொசுகாதாரத்துறையின் சார்பில் குடும்பத்திற்கு ஒன்று  வீதம்  2,60,000 கொசு வலைகள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக, அமைச்சர் பெருமக்கள் 10.11.2022 அன்று பொதுமக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சைதாப்பேட்டை, வார்டு-169க்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையின் அருகாமையில் சின்னமலை சத்யா நகர், ஆரோக்கியமாதா நகர், சைதை மசூதி தோட்டம், தாடண்டர் நகர் அரசுப் பண்ணை, ஜோதியம்மாள் நகர் ஆகியப் பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கு துணை மேயர் மு.மகேஷ்குமார்  இன்று (10.11.2022) கொசு வலைகளை வழங்கினார்.

Related Stories: