சென்னை: காதலியை விரைவில் கரம் பிடிப்பேன் என நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷாலுக்கு 45 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இந்நிலையில் நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாக சில நாட்களாக தகவல் பரவியுள்ளது.