தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்; டிச. 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி..!!

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182  வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பங்கேற்றார். தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை சத்யபிரதா சாகு வெளிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவர் கூட விடுபடக்கூடாது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 7,758 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார்.

டிசம்பர் 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்:

இன்று முதல் டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தும் பணியை மேற்கொள்ளலாம். மரணமடைந்த 2.44 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: