வத்தலக்குண்டு அருகே வாழையை தாக்கும் வெடிப்பு, குருத்துப் பூச்சி நோய்கள்-விவசாயிகள் கவலை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாட்டு வாழை, கற்பூரவல்லி போன்ற பலவகை வாழை விவசாயம் நடந்து வருகிறது.தற்போது வாழையில் வெடிப்பு மற்றும் குருத்துப் பூச்சிநோய் ஏற்பட்டு வாழை வாடுகின்றது. மழை தொடர்ந்து பெய்வதாலும் கண்மாய் நிரம்பி விட்டதாலும் இனி தண்ணீர் பிரச்சனை இல்லை என்று நிம்மதியாக இருந்த வாழை விவசாயிகளுக்கு தற்போது வாழையில் வந்துள்ள நோய்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வெடிப்பு நோய் வந்தவாழை மரங்களின் தண்டு பகுதியில் கத்தியால் வெட்டியது போல கருப்பு நிறத்தில் உள்ளது. குருத்து பூச்சிநோய் ஏற்பட்டுள்ள வாழை மரஇலைகளில் சிறு சிறு ஓட்டைகள் விழுந்து உள்ளது.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் நேரடியாக வாழை தோப்புக்கு வந்து ஆய்வு செய்து உரிய மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: