வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி நிறுத்தம் எதிரொலி: மீன்பிடி தொழிலுக்கு மாறிய உப்பள தொழிலாளர்கள்

வேதாரண்யம்: உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மாற்று தொழிலான மீன்பிடி தொழிலுக்கு உப்பள தொழிலாளர்கள் மாறியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.  ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி செப்டம்பர் மாதம் வரை  நடைபெறும். இங்கு 6 லட்சம் மெடரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக உப்பு உற்பத்தியில் இராண்டாம்  இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் நேரிடையாகவும்,  மறைமுகாமகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த  ஒரு வாரத்திற்கு முன் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு  உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 10  ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்த  கனமழையால் உப்பள பகுதிகளில் உள்ள உள்வழி சாலைகள் மிகுந்த சேதமடைந்த  காரணத்தால் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு  நாட்களாக உப்பள பகுதியிகள் ஆள் நடமாட்டம் இல்லமால் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது  தொடர்மழை நின்று அவ்வப்போது லேசான மழையும், வெயிலும் அடித்து வரும்  நிலையில் உப்பளங்களில் உப்பு பாக்கெட் போடும் பணியில் பெண்கள் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் உப்பு தொழிலை நம்பியுள்ள உப்பள  தொழிலாளர்கள் குறைந்த அளவு ஆட்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு  கிடைத்துள்ளது.

உப்பள  பகுதிகளில் வலை விரித்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால் அன்றாட வருமானம் ஓரளவு பூர்த்தியாகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி  குறைந்த நிலையில் தரமான வெள்ளை உப்பு ₹5ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும் என  உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: