43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து: 26 பேர் மீட்பு

தான்சானியா: 43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் பிரிஷிஷியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தான்சானியாவின் ‘தார் எஸ் சலாம்’ நகரில் இருந்து புகோபா என்ற இடத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 39 பயணிகள் மற்றும் 4 விமானிகள் உட்பட 43 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா என்ற ஏரி அருகே விமானம் வந்தபோது மிக மோசமான வானிலை காரணமாக விமான ஓடு தளத்திற்கு 100மீ முன்பாகவே விமானம் எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்திற்குள்ளானது.

ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்புப் பணியாளர்கள், உள்ளூர் மீனவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: