சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொதுக்குழுவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளவை பரிசீலித்து, குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடி வரும் தண்டனை சிறைவாசிகள், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும்.