தஞ்சாவூரில் உரிய பராமரிப்பு இல்லாத மிகவும் பழுதடைந்த வீடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலர்கள் இடித்து அகற்றம்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் உரிய பராமரிப்பு இல்லாத மிகவும் பழுதடைந்த வீடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலர்கள் இடித்து அப்புறபடுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாநகட்சிக்கு உட்பட்ட கீழவீதி பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட மேலஅலங்கம், மேலவீதி, கீழவீதி, தெற்கு வீதி, உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உரிய முறையில் பராமரிக்கப்பட்டதா கட்டிடங்கள் மற்றும் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர், சம்மந்தப்பட்ட வீடு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விட்டு பழைய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. இதேபோல் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களையும் மாநகராட்சி அலுவலர்கள் இடித்துள்ளனர். பழுதடைந்த வீடுகள் உள்ளிட்ட 60 கட்டிடங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்கப்பட்டன.    

Related Stories: