சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த செப் 13-ம் தேதி கல்லூரி மாணவி சத்திய பிரியா ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சதீஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின்பு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி சதீஷை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட சதீஷை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காணொளி மூலமாக குற்றவாளி சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம் சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: