சென்னை விமானநிலையத்தில் பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று  மதுரை, கோவைக்கு போதிய பயணிகள் இல்லாததால் 4 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொடர் மழை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதையடுத்து, நேற்று காலை முதல் இரவு வரை மதுரை, கோவைக்கான 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, நேற்று காலை 11.10 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய தனியார் விமானம், பிற்பகல் 2.30 மணிக்கு கோவை செல்லும் தனியார் விமானத்தில் போதிய பயணிகள் இன்றி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் மதுரையில் இருந்து மதியம் 12.45 மணியளவில் சென்னை வரவேண்டிய தனியார் விமானம், கோவையில் இருந்து மாலை 5.15 மணிக்கு சென்னை வரும் தனியார் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் பயணிகள் வருகையின்றி 4 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: