சபரிமலையில் மண்டல மகரவிளக்கு யாத்திரை நவ.16ம் தேதி மாலை தொடங்கும்: திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16ம் தேதி மாலை தொடங்கும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல திருவிழா காலம்; மண்டல பூஜை டிசம்பர் 27ல் நடைபெறும்.  மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜை: 13 மையங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி

சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை சாமி தரிசனத்துக்காக 13 மையங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை மகரவிளக்கு விழாவை ஒட்டி டிசம்பர் 30ம் தேதி மாலையில் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 மகர விளக்கு, சபரிமலை கோயில் நடை ஜனவரி 20ம் தேதி மூடப்படும் எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசிக்க ஆன்லைன் பதிவு அவசியம்:

சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் 16ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: