சென்னை: பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்த கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும்.