இந்தி திணிப்பு போன்ற நடவடிக்கைகள் இணைப்பு பாலமாக இருக்காது; தொங்கு பாலமாக தான் இருக்கும்: கி.வீரமணி சாடல்

சென்னை: இந்தி திணிப்பு போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் இணைப்பு பாலமாக இருக்காது, தொங்கு பாலமாக தான் இருக்கும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். தமிழ் பண்பாட்டு சங்கம், தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம், தலைநகர் தமிழ் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கி.வீரமணி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம் பற்றி கவனம் செலுத்தாத ஒன்றிய அரசு, தேவையின்றி இந்தியை திணிப்பதாக சாடினார். இதுபோன்ற நடவடிக்கைகள் இணைப்பு பாலமாக இருக்காது; தொங்கு பாலமாக தான் இருக்கும் எனவும் விமர்சித்தார்.

Related Stories: