தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 298 வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முனுகோடு சட்டமன்ற தொகுதியில் 2,41,367 வாக்காளர்கள் உள்ளனர்.

2018 தேர்தலில் முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோமட்டி ராஜகோபால ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3 ஆண்டுகளுக்கு மேல் எம்.எல்.ஏ.வாக இருந்த கோமட்டி ராஜகோபால ரெட்டி, பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்தார்.

முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். சார்பில் குசுகுந்த்லா பிரபாகர், பா.ஜ.க.சார்பில் கோமட்டி ராஜகோபால ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பால்வி ஸ்ரவந்தி போட்டியிடுகிறார்.

மேலும் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரூ.100 கோடிக்கு மேல் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: