புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் பரிதாப சாவு

பெரம்பூர்: புளியந்தோப்பில் வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்து தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியை சேர்ந்தவர் கபாலி (50). இவரது மனைவி சாந்தி (45). இவர்கள் காய்கறி வியாபாரம் செய்தனர். தம்பதிக்கு 22 வயதில் மன வளர்ச்சி குன்றிய வித்யா என்ற மகளும் 20 வயதில் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த பகுதியில் நேற்றிரவு முதல் மழை கனபெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி அளவில், சாந்தி வீட்டின் உள்ள அடிபம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஜன்னலின் மேல் பக்கவாட்டில் உள்ள சன்சைடு சுவர் இடிந்து சாந்தி தலையின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு போலீசார் சென்று சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு வீட்டின் உரிமையாளரான மணவாளனிடம் விசாரித்து வருகின்றனர். நேற்றுமுதல் சென்னையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர், பால்கனி ஆகியவை ஈரத்தன்மையுடன் காணப்பட்டுள்ளது. இதன்காரணமாக சன்சைடு இடிந்துவிழுந்து பெண் உயிரிழந்துள்ளார்’ என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: