கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் செவ்வாய்கிழமைகளில் இனி பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை: தூய்மை பணிக்காக நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள், செவ்வாய்கிழமைகளில் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர். இதற்காக குறிப்பிட்ட கட்டணம் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பேரிஜம் ஏரிக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் தூய்மை செய்யும் பணி நடைபெறுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இனி செவ்வாய்க்கிழமைதோறும் சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிஜம் ஏரிக்கு சட்டமன்ற குழுவினர் வருகை தரவுள்ளதால் அக். 31 (நேற்று) (இன்று) ஆகிய 2 நாட்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திடீரென்று ஆய்வுப் பணி காரணமாக ஏரி மூடப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: