ஒன்றிய அரசு வழங்கும் வேளாண் உதவித்தொகையில் குளறுபடி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 60,000 விவசாயிகள் பெயர் நீக்கம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் உதவி தொகை பெறும் திட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் 60 ஆயிரம் விவசாயிகள் பெயர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் உதவித்தொகை பெறுவதில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு வந்ததை அடுத்து உதவித்தொகை பெறுபவர்களின் வங்கி கணக்குகளை வேளாண்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் விவசாயிகள் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதில் ஏழை விவசாயிகளின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முறையான விளக்கத்தையும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர். நிபந்தனைகள் என்ற பெயரில் உதவித்தொகை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறினர். பெயரில் உள்ள சாதாரண எழுத்து பிழைகளை கூட காரணமாக காட்டி கழித்துக்கட்டுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். தனி பட்டா, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தும் ஒன்றிய அரசின் வேளாண் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: