‘புளூ டிக்’ டுவிட்டர் கணக்குக்கு மாதம் ரூ.1,600 கட்டணம்?: எலான் மஸ்க் அதிரடி

நியூயார்க்: உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்கியதால், ஏற்கனவே பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கினார். ெதாடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

டுவிட்டர் புளூ டிக்கிற்காக பயனர்கள் 4.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.410 வரை) செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1,600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லையெனில், பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள நீலநிற புளூ டிக் குறியீட்டை பறிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

Related Stories: