தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்பைாயினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர்,பார்சி மற்றும் ஜெயின் பதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மைய  / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு (Pro Matric) பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.schplorship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு (Pre Matric) கல்வி உதவித்திட்டத்திற்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இத்திட்டம் இன்றுடன் முடிவடைவதால் மாணவ மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: