தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் நடவடிக்கை எடுங்கள்; பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் நடவடிக்கை எடுங்கள் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: நான் பல கருத்துக்கள் கூறி, விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது, காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி. ஒரு ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

அக்டோபர் மாதம் 23ம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது.அதில் ஜமேஷா முபீன் 89ம் இடத்தில் உள்ளார். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது செய்தியில் சுட்டி காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்த போது எனது நடவடிக்கைகளை  நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து கொள்ளுங்கள். மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை. ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை  மறந்து விட வேண்டாம். இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள்.

Related Stories: