கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீஸ் திடீர் ஆய்வு

கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீஸ் திடீர் ஆய்வு நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமாக, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின் கடந்த ஏப்ரல் 2017ல் இங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது.  இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கொடநாட்டிற்கு கடந்த 22ம் தேதி சென்று கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த எஸ்டேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடநாட்டிற்கு சென்று எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இவ்வழக்கு சம்மந்தமாக விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர், கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சிபிசிஐடி போலீசார் வருவார்கள் என்றும், மேலாளர், காசாளர் என யாரும் வெளியூருக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: