50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 2 பழங்கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்க போலீசார் நடவடிக்கை

சென்னை: ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு பழங்கால சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் ஆகியோரின் வெண்கல சிலை மீது தமிழக அரசின் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுவதற்கான சட்ட ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சோமாஸ்கந்தர் சிகலையை ஃப்ரீயர் சாக்லர் மியூசியம், வாஷிங்டன் டிசி மற்றும் நடன சம்பந்தரை கிறிஸ்டஸ்.டாட் காம், அமெரிக்கா ஆகியவற்றில் கண்டுபிடித்தது. திருடப்பட்ட நடன சம்பந்தரை 2011ல் கிறிஸ்டிஸ் ரூ.98500க்கு விற்றது, இது 81.54 லட்சத்துக்கு சமம். ஆலத்தூர் திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான மூன்று பழங்கால உலோகச் சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உரிய விசாரணை நடத்தி, திருடப்பட்ட இக்கோயிலில் உள்ள பழங்கால உலோகச் சிலைகளை மீட்டு, பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என, இந்து அறநிலையத்துறை அதிகாரி போலீசுக்கு கோரிக்கை விடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதனால், கோயிலில் இருந்த சிலைகளின் புகைப்படங்களைப் பெற்று, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள், தனியார் சேகரிப்பாளர்களின் சிற்றேடுகளில் சிலைகளை தேட குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, ப்ரீயர் சாக்லர் மியூசியத்தில் சோமாஸ்கந்தர் சிலைகளையும், கிறிஸ்டிஸ் டாட் காம் இணையதளத்தில், நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சிலைகளின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை தயாரித்து சிலைகளை அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். விரைவில் சிலைகள் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: