தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை: மதுரை முதலிடம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விற்பனையாகும். இந்தாண்டு அதிகளவில் மதுபானம் விற்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன. சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த 22ம் தேதி சென்னையில் ரூ.38.64 கோடி, திருச்சியில் ரூ.41.36 கோடி, சேலத்தில் ரூ.40.82 கோடி, மதுரையில் ரூ.45.26 கோடி, கோவையில் ரூ.39.34 கோடி என மொத்தம் ரூ.205.42 கோடிக்கு மது விற்பனை நடந்தது.

இதேபோல், 23ம் தேதி, சென்னையில் ரூ.51.52 கோடி, திருச்சியில் ரூ.50.66 கோடி, சேலத்தில் ரூ.52.36 கோடி, மதுரையில் ரூ.55.78 கோடி, கோவையில் ரூ.48.47 கோடி என மொத்தம் ரூ.258.79 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தீபாவளியன்று சென்னையில் ரூ.48.80 கோடி, திருச்சியில் ரூ.47.78 கோடி, சேலத்தில் ரூ.49.21 கோடி, மதுரையில் ரூ.52.87, கோவையில் ரூ.45.42 கோடி என மொத்தம் 244.08 கோடிக்கு மது விற்பனை நடந்தது. ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை ரூ.431 கோடி. இந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: