தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறை மீனவர் வீரக்குமாருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மேல் சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இந்திய கடற்படையின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் ஆளாகியுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது இலங்கை கடற்படை தாக்குதலை தொடுக்கும்போது, அதனை தடுத்து தமிழக மீனவர்களை காக்க வேண்டிய இந்திய கடலோரப்படை, தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது வேதனையளிக்கிறது.

இந்த தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டதாக இந்திய கடற்படை விளக்கமளித்தாலும், பொறுப்பற்ற முறையில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆகவே, தாக்குதலை நடத்திய இந்திய கடலோரப்படை அதிகாரிகள் மீது மத்திய பாதுகாப்புத்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து பணி நீக்கம் செய்ய

வேண்டும்.

Related Stories: