டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு

சென்னை: திருவள்ளூரை அடுத்த தாமரைப்பாக்கத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமார்,  இணைச்செயலாளர்கள்  மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி,  ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன்,  மணிவண்ணகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், சிபிஐ மாவட்ட நிர்வாகி கே.கஜேந்திரன், மாரி, மாநில பொதுச்செயலாளர்கள் மூர்த்தி, தனசேகர், பொருளாளர் கோவிந்தராஜ்,  விளக்கவுரையாற்றினார்.

கிழக்கு மாவட்ட தலைவர் நாராயணராஜூ, இணைச்செயலாளர்கள் செல்வம், கோபிநாதன், பொருளாளர் லிங்கேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டில் 19 ஆண்டு காலம் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட நேரத்தை விட பல மணி நேரம் கூடுதலாக பணிபுரியும், பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரமாக வழங்கவேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதலாக 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி மாதம் தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்து வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: