×

கீரை வடை

செய்முறை :

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காயும் வரை காத்திருங்கள். எண்ணெய் காய்ந்ததும் எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள். பொன்னிறமாக பொறிந்ததும் எண்ணெய் இறுத்து வெளியே எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் கீரை வடை தயார்.

குறிப்பு: இந்த வடைக்கு அரை கீரை ,சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.         

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்