தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் அமைக்கப்பட உள்ள 50 சுகாதார நிலையங்களுக்கு ரூ.120 கோடி செலவாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். சுகாதார நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு 60%- மும், மாநில அரசு 40%-மும் நிதி ஒதுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: