×

மட்டன் டிக்கா மசாலா

செய்முறை:

மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும். தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும். தேவையான உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித் தெடுக்கவும். வெங்காய த்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.

Tags :
× RELATED கல்லீரலை குறி பார்க்கும் ஹெபடைடிஸ்!