பஸ் மீது லாரி மோதல் : 10 பெண்கள் படுகாயம்: ஸ்ரீ பெரும்புதூரில் பரபரப்பு

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூரில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயமடைந்தனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே விஆர்பி சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்காக கம்பெனி சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

நேற்றிரவு 10 மணியளவில் 30க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களை ஏற்றி கொண்டு, காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி புறப்பட்டது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே சென்றபோது, எதிரே ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் படுகாயமடைந்தனர். ரத்த காயத்துடன் அலறி துடித்தனர்.

தகவலறிந்து ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய பெண்களை மீட்டு, ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் ஸ்ரீ பெரும்புதூர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: