விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுங்கள்: பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி தெரிவித்ததாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் தீபாவளி தினத்தில் கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சென்னையில் சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்,   குறிப்பாக,பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். என அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: