அந்தியூர் அருகே திடீர் காட்டாற்று வெள்ளம்: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற தண்ணீர்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோயில் பகுதியில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக கொம்பு தூக்கி அம்மன் பள்ளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவு தண்ணீர் வெளியேறியுள்ளது.

பள்ளத்தில் அதிகளவு தண்ணீர் சென்றதால் வனத்து சின்னப்பர் கோயில் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைந்து, நகலூர் மற்றும் கொண்டையம்பாளையம் வழியாக அத்தாணி அருகே பவானி ஆற்றில் கலந்து வருகிறது.

நகலூர் பகுதியில் மழை பெய்யாத நிலையிலும் கூட அந்தியூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: