பாதுப்காப்புத்துறை கண்காட்சியை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

குஜராத்: சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள குஜராத்தில் ரூ.15.670 கோடி திட்டங்களுக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி காந்திநகரில் பாதுப்காப்புத்துறை கண்காட்சியை தொடங்கி வைக்கயுள்ளார். காந்திநகர் நடைபெறும் மாகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையம் உள்ளிட்டவற்றில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாடு 2022-யை  தொடங்கி வைத்து பலவேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத்தில்  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல அரசியல் தற்போது முதலே பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

அக்டோபர்21-ம் தேதி தேதி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அக்டோபர் 23-ம் தேதி அயோத்தியா செல்லும் பிரதமர் மோடி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். மேலும் சரயூ நதிக்கரையில் நதியில் நடைபெறும் பிரமாண்ட தீபாவளி நிகழ்ச்சியிலும் பங்கேறக்கிறார். அதன் பின்னர், நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: