காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு திருச்சியில் 300 ஏக்கர் வாழை மூழ்கியது: சேலத்தில் வீடு இடிந்து 2 மூதாட்டி பலி

திருவெறும்பூர்: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருச்சியில் 300 ஏக்கர் வாழை நீரில் மூழ்கியது. சேலத்தில் மழை காரணமாக வீடு இடிந்து 2 மூதாட்டிகள் பலியாகினர். கனமழை காரணமாக காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரங்கம் நாட்டு வாய்க்கால் இடையே திருவானைக்காவல், பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து 300 ஏக்கர் வாழை பயிர்கள் மூழ்கியது. இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடத்தில் 4வது முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மழை: சேலம் அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் சீரங்காயி (75).

நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது. அதில், வீடு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கி சீரங்காயி உயிரிழந்தார். இடைப்பாடியைச் சேர்ந்தவர் ராணி (65). தகரக்கொட்டகையால் ஆன குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மண்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். ஈரோட்டில்: மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால்,  ஈரோடு மாவட்ட கரையோர பகுதிகளில் பாதிப்பு மேலும் அதிகரித்தது. இதனால்,  பாதிக்கப்பட்ட 193 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டன.

Related Stories: