மேட்டூரில் இருந்து 1.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். மேட்டூரில் இருந்து 1.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து வரும் நீரில் பவானி, அமராவதி,நொய்யல் ஆறுகளின் நீரும் சேருவதால் முக்கொம்புக்கு 2.17 லட்சம் கன அடி நீர்வரத்து இருக்கும்.  அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: