தேவாரம் பகுதியில் மழையால் சோளக்கதிர் விளைச்சல் அமோகம்

தேவாரம் : தேனி மாவட்டம், தேவாரம், பண்ணைப்புரம், தே.லட்சுமிநாயக்கன்பட்டி, டி.ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் சோளப்பயிர்கள் கருகி வந்தன. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக சோளம் பயிர்கள் நன்றாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சோளக்கதிர்கள் கால்நடைகளுக்கு நல்ல தீவனங்களாக உள்ளன. இதனை கேரளாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்கின்றனர். நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளும் இதனை விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாததால் எங்களுக்கு சோளம் பயிரிட்ட எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்தாண்டு நல்ல மழை பெய்துவருவதால் சோளக்கதிர்கள் நன்றாக வளர்ந்துள்ளன. இதனால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றனர்.

Related Stories: