வாழைப்பூ பொரியல்

செய்முறை

வாழைப்பூவில் இருந்து கெட்டியான காம்பை நீக்கி பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு சிறிது தண்ணீரில் மோர், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி, அதில் நறுக்கிய வாழைப்பூவைப் போடவும். இல்லையென்றால் பூ கருத்து விடும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்கயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். மோரில் உள்ள நறுக்கிய வாழைப்பூவை மட்டும் எடுத்து இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சுண்டி வாழைப்பூ நன்றாக வெந்ததும் பருப்பு பொடியை போட்டு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

Related Stories: