107வது இடத்தில் இந்தியா பொய்களை பரப்பாமல் பசியை போக்குங்கள்: ஒன்றிய அரசுக்கு மநீம கோரிக்கை

சென்னை: உலக பசி குறியீட்டு அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் கணக்கெடுக்கப்பட்ட 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது. இதை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், ‘இந்த அறிக்கைக்கு  எதிராக பொய்களை பரப்பாமல், மக்களின் பசியை போக்க வேண்டும்’ என்று, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டச்சத்து பற்றாக்குறை, குழந்தைகளின் வயது, உயரத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்கு உள்பட்ட குழந் தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். வறுமையை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை உலக பசி குறியீடு புள்ளி விவரங்கள் வலியுறுத்துகின்றன. இந்திய பொருளாதாரம் பட்டொளி வீசி பறக்

கிறது. நாட்டின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது என்றெல்லாம் மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை நிறுத்திவிட்டு, மக்களின்  உண்மை நிலையை உணர்ந்து, பசியை போக்குவதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

Related Stories: